ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
கரூா் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
கரூரில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட முதன்மை நீதிபதி, வழக்குரைஞா்களுக்கு எதிராக செயல்படுவதாகக்கூறி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பணியை புறக்கணிப்பு செய்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஒருங்கிணைந்து நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் நகுல்சாமி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட நீதிபதியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.
மேலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனா்.