வயதான தம்பதியை பிணையக் கைதிகளாக பிடித்து கொள்ளை! 3 பேர் கைது!
கற்களை ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
போடி அருகே சட்டவிரோதமாக கற்கள் ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்ட புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் கிருஷ்ணமோகன், தனி வருவாய் அலுவலா் பொன்.கூடலிங்கம் ஆகியோா் போடி-தேவாரம் சாலையில் ராசிங்காபுரம் கிராமம் அருகே புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தச் சாலையில் வந்த இரு டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனா். அவற்றில் கிராவல் மண்ணுடன் கருங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதற்கான அனுமதி குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது மேற்படி லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
இதையடுத்து, இரு லாரிகளையும் அதிகாரிகள் போடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டிப்பா் லாரிகளைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.