செய்திகள் :

கலீல் அகமது ஓவரில் 33 ரன்கள் அடித்தது எப்படி? ரோமாரியோ ஷெப்பர்டு பதில்!

post image

சென்னை சூப்பர் கிங்ஸின் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமதின் ஒரே ஓவரில் 33 ரன்கள் அடித்தது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ரோமாரியோ ஷெப்பர்டு பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: ஒரே ஓவரில் 33 ரன்கள் வழங்கிய கலீல் அகமது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

முதலில் விளையாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீசிய கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் ஆர்சிபி 54 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெப்பர்டு 14 பந்துகளில் 53 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து களத்தில் இருந்தார். கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் மட்டும் அவர் 33 ரன்கள் எடுத்தார்.

ஒரே ஓவரில் 33 ரன்கள் எடுத்தது எப்படி?

சிஎஸ்கேவின் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது பந்துவீச்சில் ஒரே ஓவரில் 33 ரன்கள் எடுத்தது எப்படி என்பது குறித்து ரோமாரியோ ஷெப்பர்டு பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், பந்துவீச்சாளர் என்ன செய்கிறார் என்பதில் நான் கவனம் செலுத்தினேன். அவர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதை கவனித்தேன். முதல் இரண்டு சிக்ஸர்கள் அடித்த பிறகு, பந்துவீச்சாளர் அழுத்தத்தில் இருப்பார் என எனக்குத் தெரியும். அவருடைய உடல் மொழியை கவனித்தேன். அவருடைய உடல் மொழியிலிருந்து அவரை மேலும் அழுத்தத்தில் வைத்திருக்க முடியும் என நினைத்தேன்.

இதையும் படிக்க: தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: தோனி

கலீல் அகமதை கவனித்தேன். அவர் குழப்பமாக இருப்பதை உணர்ந்தேன். அதனால், அவருக்கு எதிராக அதிரடியாக விளையாட முடிந்தது. இரண்டு சிக்ஸர்கள் அடித்த பிறகு, அதே அதிரடியைத் தொடர்ந்தேன் என்றார்.

14 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸுடன் இணைந்து ரோமாரியோ ஷெப்பர்டு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரப்சிம்ரன் சிங் அரைசதம் விளாசல்; லக்னௌவுக்கு 237 ரன்கள் இலக்கு!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் க... மேலும் பார்க்க

அதிக முறை 500+ ரன்கள்... டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்ப... மேலும் பார்க்க

ரியான் பராக்கின் அதிரடி வீண்; 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றைய போட்டியில் கொல்கத்தா நை... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ... மேலும் பார்க்க

கிளன் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸில் ஆஸி. ஆல்ரவுண்டர் சேர்ப்பு!

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மாற்று வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கிளன் மேக்... மேலும் பார்க்க

அரைசதம் விளாசிய ஆண்ட்ரே ரஸல்; ராஜஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியி... மேலும் பார்க்க