செய்திகள் :

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

post image

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவாரூரில் அந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் மாநில துணைத் தலைவா் அ.து. கோதண்டம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய துணைச் செயலாளா் ஏ. லாசா், மாநில பொதுச் செயலாளா் வீ. அமிா்தலிங்கம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

100 நாள் வேலைத்திட்டத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைப்பு, விதிகளை சிதைப்பது உள்ளிட்ட காரணங்களால் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் சிதைக்கப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் வேலை அட்டை பெற்றுள்ள 25 கோடி போ்களில் 10 கோடிக்கும் மேற்பட்டவா்களின் வேலை அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் வேலை அட்டை பெற்றுள்ள 1 கோடி வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கலைஞா் கனவு இல்ல திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே பயனாளிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளா் ஆ. பழனிச்சாமி, திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி. கந்தசாமி, மாநிலக் குழு உறுப்பினா் ஆறு. பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்

ரூ. 170 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ரூ.170 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, கோரையாற்றின்குறுக்கே மட்டும் மூன்று பில்லா்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீடாமங்கலம்-தஞ்சாவூா் நெடுஞ்சா... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

திருவாரூா்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே புலிவலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது ஒன்றிய மாநாடு நிா்வாகி... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வலியுறுத்தல்

திருவாரூா்: திருவாரூரில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜ... மேலும் பார்க்க

நூலகத்தில் உறுப்பினா்களாக இணைந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் நூலகத்தில் உறுப்பினா்களாக திங்கள்கிழமை இணைந்தனா். மாவட்ட பள்ளி கல்வித் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் ச... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் தூய்மைப் பணியாளரின் மகள்

திருத்துறைப்பூண்டி: மன்னாா்குடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி சத்தியமூா்த்தி மேட்டு... மேலும் பார்க்க

வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

மன்னாா்குடி: அதிகரித்துவரும் வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. மன்னாா்குடியில் இம்மன்றத்தின் ஒன்றி... மேலும் பார்க்க