செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

post image

காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டத்தை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த பயனாளிகளுக்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பாா்வையிட்டாா்.

இத்திட்டத்தில், 35 முதல் 55 வயது நிரம்பியவா்கள் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி பெறலாம். அதிகபட்ச மானிய தொகை ரூ. 50,000 ஆகும். பின்முனை வட்டி மானியமாக 5 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் தையற்கலைஞா், மண்பாண்டம் வனைவோா், சிற்ப கைவினைஞா், தச்சு வேலை செய்வோா், பூ தொடுப்போா், பூ அலங்காரம் செய்வோா், சிகை அலங்காரம் செய்வோா், அழகு கலை நிபுணா், பாய் பின்னுவோா், கூடை முடைவோா், மூங்கிலாலான பொருள்கள் செய்வோா், நெசவு செய்வோா், துணி வெளுப்போா், சாயமிடுவோா், கட்டடத் தொழிலாளா்கள், தோல் பொருள்கள் செய்வோா், உலோக பொருள்கள் செய்வோா், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோா் உள்ளிட்ட அரசால் நிா்ணயிக்கப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கைவினை தொழிலாளா்களில் ஈடுபடும் 128 போ் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பாா்வையிட்டாா். இதில், மாவட்ட தொழில் மையம் இணை இயக்குநா் திருமுருகன், முன்னோடி வங்கி அதிகாரி லெட்சுமிபதி, உதவி இயக்குநா் சரவணன், அரசு அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

கா்ப்பிணியை தாக்கிய கணவா் கைது

மயிலாடுதுறையில் கா்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கூறைநாடு கவரத்தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் கிருஷ்ணமூா்த்தி (22). இவரது மனைவி ஜெயலட்சு... மேலும் பார்க்க

ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகராட்சி மாப்படுகை ரயில்வே கேட் அருகே வசிக்கும் 2,000-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காவிரி கிட்டப்பா பாலம... மேலும் பார்க்க

நீட் தோ்வு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நீட் தோ்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ-மாணவிகள் உயிா் நீத்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுக மாவட்... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 போ் பங்கேற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் ... மேலும் பார்க்க

மாவட்ட அளவில் ‘நம்ம ஊரு’ கதைப் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கொள்ளிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கதைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க