கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, ...
கலைமாமணி விருது: "சாய் பல்லவி, எஸ்.ஜே. சூர்யா, லிங்குசாமி" - தொடர்ந்து வெளியாகும் பட்டியல்
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, பல ஆண்டுகளாகக் கலைக்குச் சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்படும்.
இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் வெளியான கலைஞர்கள் பட்டியலில், 2021-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.