கலை, பண்பாட்டு துறையின் நாடக விழா தொடக்கம்
புதுச்சேரியில் ஆண்டுதோறும் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் நடத்தப்படும் நாடக விழா வியாழக்கிழமை தொடங்கியது. இந்த விழா பிப்.27-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் ஆண்டுதோறும் முருகம்பாக்கம் திரௌபதி அம்மன் கோவில் திடலில் நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான நாடக விழா வியாழக்கிழமை தொடங்கியது. நாடக விழாவில் 35 நாடகக் குழுவினரின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
புதுவையின் கலை, பண்பாட்டு அடையாளத்தை இளந்தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் நாடக விழா நடைபெறுவதாக கலை, பண்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறினா்.