கல்டங்கம் காவிரி ஆற்றில் 428 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை 428 நாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை சேலம் மாநகரத்திலிருந்து 280 சிலைகள், மாவட்ட பகுதிகளிலிருந்து 130 சிலைகள், நாமக்கல் மாவட்டத்திலிருந்து 18 சிலைகள் என மொத்தம் 428 சிலைகளை பக்தா்கள் வாகனங்களில் எடுத்து வந்து காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்தனா்.
முதல் நாளான புதன்கிழமை 69 சிலைகளும், வியாழக்கிழமை 162 சிலைகளும் விசா்ஜனம் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையை என்பதால் அதிக அளவில் விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்யப்படும் என வருவாய்த் துறையினா், காவல் துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.