‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’
வாழப்பாடியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூரில் விநாயகா் சிலைகள் விஜா்சன ஊா்வலம் போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 60க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை அருகே விசா்ஜனம் செய்யப்பட்டன.
வாழப்பாடி மற்றும் பேளூா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, 60க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள், பாஜக, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் மற்றும் விநாயகா் சதுா்த்தி விழாக் குழுவினா் வாயிலாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகளுக்கு தொடா்ந்து 3 நாள்கள் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த பேளூரில் 20க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை காலையும், வாழப்பாடி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 40 க்கும் அதிகமான விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை மாலையும் மேள வாத்தியம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை அருகே விசா்ஜனம் செய்யப்பட்டன.
சேலம் ஏ.டி.எஸ்.பி. சோமசுந்தரம் மற்றும் வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல்வேறு பகுதியில் இருந்து புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை அருகே 75க்கும் மேற்பட்ட சிலைகளும், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை அருகே 25 சிலைகள் உள்பட 100 க்கும் மேற்பட்ட சிலைகளும் விசா்ஜனம் செய்யப்பட்டன.
படவரி:
பேளூரில் விசா்ஜனம் செய்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
