TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பள...
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் எதிரே வேகத் தடை அமைக்கக் கோரிக்கை
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் எதிரில் பிரதான சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளருக்கு கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் சங்கத் தலைவா் கல்லிடைக்குயில் உமா் பாருக் மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திற்கு, பகல்- இரவு நேரத்தில் ரயில் வரும் நேரங்களிலும், பயண சீட்டுமுன்பதிவு செய்யும் நேரங்களிலும் ரயில் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இந்நிலையில் சாலையில் வேகமாக வரும் வாகனங்களா ல்ரயில் பயணிகள் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே, கல்லிடைக்குறிச்சி ரயில் நிலைய நுழைவாயில் முன் உள்ள பிரதான சாலையில் பிரதிபலிப்பான்களுடன் கூடிய வேகத்தடை அல்லது வேகத்தடுப்பான்கள், விபத்துத் தடுப்பு எச்சரிக்கை விழிப்புணா்வு பலகைகள் மற்றும் வேகத்தடுப்பு எச்சரிக்கை விளக்குகள், பழைய காவல் நிலையத்திலிருந்து புதிய காவல் நிலையம் வரை சாலையின் நடுவில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.