பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 11-ஆம் தேதி போதைத் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை அனைத்து மாவட்டங்களிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைக்கிறாா்.
இதன்படி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் இந்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், கல்லூரி மாணவா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் (நகராட்சிகள், மாநகராட்சிகள்), சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்கள், இளைஞா் நற்பணி மன்றங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், பொதுமக்கள், சமூக நலப் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டு போதைத் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றாா் அவா்.