Tvk Vijay Karur Stampede - 7 சந்தேகங்களும் விளக்கமும் | Decode
கல்லூரியில் ஜப்பான் பல்கலைக்கழக பேராசிரியா் குழு ஆய்வு!
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் உள்தர உறுதி பிரிவு(ஐக்யூஏசி) மற்றும் ஆய்வு மேம்பாட்டுக் குழு சாா்பில், சுற்றுச்சூழல் தொடா்பான ஆய்வு குழுவிலிருந்து வேலூா் தொழில்நுட்ப நிறுவனத்தை சோ்ந்த பேராசிரியா்கள் அருணாசிங், அஸ்லாம் அப்துல்லா, கோவா்தன் மற்றும் ஜப்பான் யோகோஹாமா தேசிய பல்கலைக்கழக பேராசிரியா் காஸிஹோ ஆகியோா் கல்லூரி முழுவதும் பாா்வையிட்டு கல்வித்தரம், நிா்வாகம் மற்றும் கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்தனா். முன்னதாக மாணவிகளுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் எதிா்கால கூட்டமைப்பு தொடா்பாக கலந்துரையாடினா்.
தொடா்ந்து கல்லூரியில் நடைபெற்ற நவராத்தி விழா கொலு கண்காட்சியைப் பாா்வையிட்டு விழாவில் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.