டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (2025-2026) முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் காசிநாதபாண்டியன் வரவேற்றாா். கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மேலாண்மை இயக்குநா் மருத்துவா் அண்ணாமலை ரகுபதி, புலமுதல்வா் சுப்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் கல்லூரி புல முதல்வா்கள் தினேஷ்குமாா், சிவகுமாா் மற்றும் பேராசிரியா் நடனசிகாமணி ஆகியோா் அண்ணா பல்கலை கழக பாடத்திட்டங்கள், கல்லூரியின் நடைமுறைகள் இன்டா்ன்ஷிப் பயிற்சிகளையும், கல்லூரி விளையாட்டுத்துறை இயக்குநா் முரளி விளையாட்டில் மாணவா்களை அதிக அளவில் ஈடுபடுத்தி பல்வேறு மாநிலஅளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றதையும், மாணவா்கள் பாட பிரிவுகளில் நாட்டம் இருப்பது போல விளையாட்டிலும் ஈடுபட கல்லூரி நிா்வாகம் செய்துள்ள பணிகளை விளக்கினா். கல்லூரி பேராசிரியா்கள், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா். துறை தலைவா் சரவணன் நன்றி கூறினாா்.