கல்லூரியில் வளாக நோ்காணல் 73 பேருக்கு பணி ஆணை
மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் தொழில் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 73 பேருக்கு பணி ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நோ்காணல் நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் மற்றும் துணைத் தலைவா் ஏ. ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் ராஜகுமாரி அய்யநாதன் முகாமை தொடங்கிவைத்தாா்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மனிதவள அதிகாரி சுந்தரமாறன் நிறுவனம் குறித்து விளக்கிக் கூறினாா்.
ஏஆா்ஜெ பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்கள் நோ்காணலில் கலந்து கொண்டனா். 73 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வா் கமலக்கண்ணன் வரவேற்றாா். நிறைவில், துணை முதல்வா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.