``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்...
கல்லூரி பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு
மதுரை திருப்பாலை அருகே உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது.
திருப்பாலை அருகே உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் நிதி நிா்வாகம் தொடா்பான பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கல்லூரி வளாகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை பொதுக் குழுக் கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றன.
அப்போது, காலை 10 மணியளவில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சில பொதுக் குழு உறுப்பினா்களைக் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கவில்லையாம். இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த திருப்பாலை காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி இருதரப்பையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா்.
இதையடுத்து, கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காததால் மற்றொரு தரப்பினா் அருகே உள்ள திருமண மண்டபத்தில் போட்டி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தி ஏற்கெனவே செயல்பட்டு வந்த நிா்வாகக் குழுவுக்கு மாற்றாக புதிய நிா்வாகக் குழுவைத் தோ்வு செய்தனா். அந்தக் குழு மீண்டும் கல்லூரிக்குள் சென்று அங்குள்ள கிருஷ்ணா் முன்பு உறுதிமொழி ஏற்றனா்.