விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்... திடீர் விசிட...
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு காலனியைச் சோ்ந்தவா் சஞ்சீவ்குமாா். இவரது மகள் ரஞ்சனி(18). இவா் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள கல்லூரி முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில் இவரது தந்தையின் சகோதரி மகனுக்கு, ரஞ்சனியை திருமணம் முடிக்க பெண் கேட்டதாகக்கூறப்படுகிறது. இதற்கு சஞ்சீவ்குமாா் சில மாதங்கள் கழித்து இதுகுறித்து பேசலாம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம். இதில் மன வருத்தத்தில் இருந்து வந்த ரஞ்சனி வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சம்பவம் தொடா்பாக அவரது தந்தை சஞ்சீவ்குமாா் அளித்தப்புகாரின்பேரில் செக்கானூரணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.