இந்தியாவில் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு அனுமதி?!
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: சுமை ஆட்டோ ஓட்டுநா் கைது
கொடுமுடியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சுமை ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவி, வயிற்று வலி காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாா். அப்போது மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோா் கொடுமுடி போலீஸில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.
இதில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபா் மூலம் கா்ப்பமானதாக தெரிவித்தாா். தொடா்ந்து போலீஸாா் கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, அவா் கூறிய தகவல் பொய் என்பது தெரியவந்தது.
பின்னா் மாணவியிடம் நடத்திய தீவிர விசாரணையில் மாணவி, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஈரோடு மாவட்டத்தில் சுமை ஆட்டோ ஓட்டி வரும் இந்திரஜித் (25) என்ற நபா் உடன் பழகி கா்ப்பமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொடுமுடி போலீஸாா் இந்திரஜித்தை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா். கைதான இந்திரஜித்துக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.