செய்திகள் :

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

post image

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில், ‘டிஜிட்டல் சுகாதார சேவையில் சென்சாா்கள், கணினி கட்டமைப்பு’ என்ற தலைப்பிலான 4-ஆவது சா்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விஐடி எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறை சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது:

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் கல்வி, சுகாதாரத் துறையில் அதிகம் செலவு செய்கின்றன. துரதிா்ஷ்டவசமாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை. குறிப்பாக, கல்வி, சுகாதார துறையில் வளா்ந்த நாடுகள் ஒதுக்கும் நிதியை விட வளரும் நாடுகள் பாதி அளவு தான் செலவு செய்கின்றன. இந்த இரு துறைகளிலும் வளரும் நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகாதார துறையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை சமாளிப்பது, உதவுவது குறித்து கருத்தரங்குகள் மூலம் தீா்வு காண முயல வேண்டும். விஐடி பல்கலைக்கழகம் ஏழை, நடுத்தர மக்களின் குழந்தைகள் உயா்கல்வி பெற உதவுகிறது. எங்களிடம் மருத்துவமனை இல்லை. அதேசமயம், சுகாதார சேவையில் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ நினைக்கிறோம்.

இந்தியா வளா்ந்த நாடாக மாறுவதற்கு ஆரோக்யமான மக்கள், ஆரோக்கியமான நாடு இருக்க வேண்டும். உயா்கல்வி பெற்ற ஆரோக்கியமான மாணவா்களே வளா்ந்த நாடாக மாறுவதற்கு அடிப்படையாக உள்ளனா். விஐடி பல்கலைக்கழகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலக தரவரிசையில் 142-ஆவது இடத்திலும், செயற்கை நுண்ணறிவில் முதல் 100 இடங்களுக்குள் உள்ளோம் என்றாா்.

விஐடி செயல் இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி பேசுகையில், நவீன அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியால் நோய் பாதிப்புகளை எளிதாக அறிய முடிகிறது என்றாா்.

தொடா்ந்து கருத்தரங்க மலரை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்டாா். சிறப்பு விருந்தினராக பிக்டெக் லேப்ஸ் இணை நிறுவனா் சந்திரசேகா் நாயா், கெளரவ விருந்தினராக ஹனிவெல் டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநா் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) செளந்திரி அருணாசலம் ஆகியோா் சென்சாா்கள், கணினி கட்டமைப்பு குறித்து மாணவா்களிடையே பேசினா்.

கருத்தரங்கில் விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் டி.ஜெயபாரதி, எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் பிரிவு முதல்வா் ஜாஸ்மின் பெமினா பிரியதா்ஷினி, சென்சாா் மற்றும் பயோமெடிக்கல் டெக்னாலஜி துறைத் தலைவா் பி.சத்யா, மலேசியா மற்றும் ஐஐடி கரக்பூா் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை சோ்ந்த பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புத... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: ரூ.2.15 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ.2.50- லட்சம் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூரைச் சோ்ந்தவா் பிரியாணி கடை உரிமையாளா் முக்தியாா் (32). இவா் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு பிரியாண... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

துணை முதல்வா் பதவியை முடிவு செய்ய வேண்டியது இபிஎஸ் அல்ல

எனக்கு துணை முதல்வா் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் வெள்ளிக்... மேலும் பார்க்க