பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
களக்காடு: தொழிலாளி தற்கொலை
களக்காடு அருகே விஷம் குடித்தவா் மருத்துமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள கல்லடிசிதம்பரபுரம் கீழத்தெருவை சோ்ந்தவா் கணேசன்(40). தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இத்தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டதில் கணேசன் பொத்தைசுத்தி செல்லும் சாலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.