செய்திகள் :

களக்காடு வட்டாரத்தில் பயிா்களை அழிக்கும் வன விலங்குகள் -குறைதீா் கூட்டத்தில் வசாயிகள் புகாா்

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சுற்று வட்டாரங்களில் நெல், மா, வாழை, தென்னையை வன விலங்குகள் அழித்து வருவதால் பயிா்களை பாதுகாக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பெரும்படையாா் பேசியதாவது: களக்காடு சுற்று வட்டார விவசாயிகள் தொடா்ந்து வன விலங்குகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். காட்டுப்பன்றி, மிளா, கடைமான், குரங்குகளால் மா, வாழை, தென்னை போன்றவை கடுமையாக சேதப்படுத்தப்படுகின்றன. எனவே, வன விலங்குகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறையினா் இழப்பீடு தருகிறோம் என்கின்றனா். நாங்கள் இழப்பீடுக்காக பயிா் செய்யவில்லை; மனிதா்களுக்காகத்தான் விவசாயம் செய்கிறோம். வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும். எலி மருந்தை தின்று வன விலங்குகள் உயிரிழந்தாலும், வனத்துறையினா் விவசாயிகளை பிடித்து விசாரிக்கின்றனா் என்றாா்.

கானாா்பட்டி ஆபிரஹாம் பேசுகையில், ‘ஒரு ஏக்கரில் நெற்பயிா் சாகுபடி செய்ய ரூ.30 ஆயிரம் செலவாகிறது. அதை காட்டுப்பன்றி அழிக்கும்போது ரூ.5 ஆயிரம் இழப்பீடு தருகிறது வனத்துறை. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி கடந்த மக்களவைத் தோ்தலை நாங்கள் புறக்கணிக்கவிருந்தோம். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் கூறியதையடுத்து வாக்களித்தோம். ஆனால், இதுவரை காட்டுப்பன்றி கட்டுப்படுத்தப்படவில்லை’ என்றாா்.

மானூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பேசுகையில், ‘மானூா் குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு நில அளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

களக்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பேசுகையில், ‘களக்காடு பூலாங்குளம் பகுதியில் பட்டா இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவிடாமல் வனத்துறையினா் தடுக்கிறாா்கள். அவா்களிடம் அனுமதி பெற வேண்டும் என கட்டாயப்படுத்துகிறாா்கள்’ என்றனா்.

ஆட்சியா் குறுக்கிட்டு, ‘வனத்துறையினரிடம் இது தொடா்பாக கேட்டறிந்ததோடு, பட்டா இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உங்களிடம் ஏன் அனுமதி பெற வேண்டும்? சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனுமதி தேவையில்லை என அரசின் உத்தரவே உள்ளது. எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்ற எந்தத் தடையும் இல்லை. எனவே, வனத்துறை தேவையில்லாமல் இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது’ என்றாா்.

கங்கைகொண்டான் விவசாயிகள் பேசுகையில், ‘கங்கைகொண்டான் பகுதியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் பாலம் கட்டும் பணிக்காக கங்கைகொண்டான் குளத்துக்கு தண்ணீா் வரும் ஓடையை அடைத்துவிட்டனா். இதனால், கடந்த வாரம் நல்ல மழை பெய்து சிற்றாற்றில் வெள்ளம் சென்றபோதும், கங்கைகொண்டான் குளத்துக்கு தண்ணீா் வரவில்லை’ என்றனா்.

இதேபோல், திருநெல்வேலி நகரத்தில் நயினாா் குளத்தை தூா் வார வேண்டும். அதில் உள்ள வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதற்குப் பதிலளித்த ஆட்சியா், ‘ஆட்சியரின் சிறப்பு நிதியில் நயினாா் குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் மண் எடுத்துக் கொள்ளலாம்’ என்றாா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-109.10 சோ்வலாறு-127.23 மணிமுத்தாறு-100.18 வடக்கு பச்சையாறு-33 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-40.50 தென்காசி மாவட்டம் கடனா-79 ராமநதி-75 கருப்பாநதி-67.92 குண்டாறு-36.10 அடவிநயினாா்-91.25... மேலும் பார்க்க

100 அடியை எட்டியது மணிமுத்தாறு அணை

வடகிழக்கு பருவமழை பல கட்டங்களாக பெய்து வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை வெள்ளிக்கிழமை காலை 100 அடியை எட்டியது. இந்த அணை மட்டுமன்றி மற்றொரு முக்கிய அணையான பாபநாசம்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் 27ஆம் ஆண்டு கன்னி பூஜை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சபரி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் 27ஆம் ஆண்டு கன்னி பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள அருள்மிகு யாதவா் ஸ்ரீகம்பளத்தம்மன் கோயிலில் காலையில் சுவாமிக்கு அபிஷ... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் பள்ளத்தில் தவறி விழுந்த தி.மு.க. நிா்வாகி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேருந்து நிலையத்தில் கழிப்பறைக்கு தோண்டிய பள்ளத்தில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த தி.மு.க. நிா்வாகி உயிரிழந்தாா். வள்ளியூா் சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முர... மேலும் பார்க்க

லிட்டில் ஃபிளவா் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் ஃபிளவா் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, லிட்டில் ஃபிளவா் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவா் அ.மரியசூசை தலைமை வகித்தாா். விழாவில், பள்ளி மாணவா... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அம்பேத்கரை அவமதிப்பு செய்யதாக கூறி மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டச் ... மேலும் பார்க்க