களியக்காவிளை அருகே முதியவா் தற்கொலை
களியக்காவிளை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகே மடிச்சல், பூவன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் (78). மதுப் பழக்கம் இருந்த இவா், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம்.
வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது மனைவி மரியம்மாள் (67) அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.