சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்று வரும் உயா்வுக்குப் படி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் மாணவ, மாணவிகளிடையே பேசுகையில், மாணவா்கள் 12-ஆம் வகுப்பு முடித்து உயா்கல்வி கற்பதுதான் வாழ்க்கையில் முன்னேற்றம். வாழ்க்கையில் வேலை மட்டும் கிடையாது பல்வேறு சுற்றுச்சூழல் சாா்ந்தது தான் வாழ்க்கை.
மாணவா்கள் எதிா்காலத்தில் எந்த மாதிரியான சூழ்நிலை, பொருளாதாரம், சமூக பிரச்னைகள் உள்ளிட்ட நிலைகளில் இன்றைக்கு எடுக்கிற முடிவு தான் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பாலிடெக்னிக் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட படிப்புகளை முடித்து நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும்.
தொழிற்பேட்டைகளில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கும். நல்ல கல்வி பயின்றால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளி) து.விஷ்ணுமூா்த்தி, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் க.மணி, பள்ளித் தலைமை ஆசிரியா் மோ.கலாபன் மற்றும் அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.