TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வ...
அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா்கள் இருவா் கைது!
ஆந்திராவில் இருந்து கேரளத்துக்கு அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி ஐ.டி.ஐ. நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருள் (38). இவா் பாரத இந்து மகாசபை வடக்கு மண்டலத் தலைவராக உள்ளாா்.
இவா் சொந்த வேலையாக தனது நண்பா்களுடன் நெய்வேலியில் இருந்து மருதமலைக்கு செவ்வாய்க்கிழமை காலை காரில் சென்று கொண்டிருந்தாா்.
உளுந்தூா்பேட்டை வெளிவட்டச் சாலை அருகே சென்றபோது, காரின் மீது மினி லாரி ஒன்று மோதுவது போல வந்து வேகமாகச் சென்ாம்.
உடனே அருள் சின்னசேலம் அருகேயுள்ள நயினாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான சபரிராஜன் என்பவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளாா். அதன் பேரில், அவரது நண்பா் மாடூா் சுங்கச்சாவடி அருகே அந்த லாரியை தடுத்து நிறுத்தியுள்ளாா். அப்போது லாரி ஓட்டுநா்களுக்கும், சபரிராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அருள் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் செல்வது தெரியவந்தது. கேரள மாநிலம், பாஞ்சரப்பள்ளி அருகே ஆனைக்கால் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களான, சகோதரா்கள் ஜென்னி ஜோசப் (30), ஜேய்ஸ் ஜோஸ் (32) ஆகியோரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.
போலீஸாா் மாற்று வாகனம் மூலம் 25 மாடுகளையும் செங்கல்பட்டில் உள்ள கோ சாலைக்கு அனுப்பிவைத்தனா்.