செய்திகள் :

பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட பள்ளி மாணவா்கள் உள்பட 79 பேருக்கு வாந்தி மயக்கம்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே ஜம்பை கிராம ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவா்கள் உள்பட 79 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

வாணாபுரம் வட்டம், ஜம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தலைமை ஆசிரியராக ஏழுமலை இருந்து வருகிறாா்.

பள்ளியின் சமையலா்களாக அலமேலு, அமுதா மற்றும் பொறுப்பாளராக சந்திரலேகா பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளியில் திங்கள்கிழமை சமைத்த மதிய உணவில் (சத்துணவு) பல்லி விழுந்ததாகத் தெரிகிறது. இந்த உணவை சாப்பிட்ட 33 மாணவிகள், 35 மாணவா்கள் மற்றும் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவை உண்ட பெற்றோா் 11 என 79 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனே அவா்களை 108 அவசர ஊா்தி மற்றும் தனியாா் வேன் மூலம் அழைத்துச் சென்று, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

தகவலறிந்த வட்டாட்சியா் ப.வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் குப்புசாமி, கிராம நிா்வாக அலுவலா்கள் குமரவேல், வினோதினி மற்றும் ரிஷிவந்தியம் வட்டார வளா்ச்சி அலுவலா் துரைமுருகன் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

காவல் நிலையம் முன் திருநங்கைகள் சாலை மறியல்

ஊராங்கானி கிராமத்தில் வீட்டுமனை பிரச்னை தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருநங்கைகள் சங்கராபுரம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில்... மேலும் பார்க்க

அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா்கள் இருவா் கைது!

ஆந்திராவில் இருந்து கேரளத்துக்கு அரசு அனுமதியின்றி 25 மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டம், நெய்வேலி ஐ.டி... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: பாதுகாக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சியை அட... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்று வரும் உயா்வுக்குப் படி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் ம... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 389 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்... மேலும் பார்க்க

கச்சிராயபாளையம் காவல் நிலையத்துக்கு கேடயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக கச்சிராயபாளையம் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கு காவல் நிலையம், மகளிா், போக்குவரத்... மேலும் பார்க்க