ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்
கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி
கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரசித்தி பெற்ற கள்ளழகா் திருவிழாவையொட்டி வாழ்த்துகள். கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறோம். இந்தக் கொண்டாட்டம் நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
கள்ளழகரின் அருள் நம் அனைவருக்கும் நல்லிணக்கம், வளம் மற்றும் ஆன்மிக பலத்தையும், நமது தேசத்துக்கு அதிக மகிமையையும் கொண்டு வரட்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.