கள்ளா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
கள்ளா் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கள்ளா் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அனைத்து கள்ளா் கூட்டமைப்பினா் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த வகையில், திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்து கள்ளா் கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் பாண்டியன், சபரி பாண்டியன், முத்துகிருஷ்ணதேவா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஓ.வை.தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலுள்ள கள்ளா் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக் கூடாது. அரசாணை எண் 40-யை ரத்து செய்ய வேண்டும். தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்கு 58 கிராமக் கால்வாயில் தண்ணீரை திறக்க நிரந்த அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.