`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு
தேனியில் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா், ஆசிரியா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினா்.
பிற்படுத்தப்பட்டோா்,சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில்,தேனி நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்தாா். தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கம்பம் நா.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமாா், மதுரை கள்ளா் சீரமைப்புத் துறை இணை இயக்குநா் க.முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு , பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95 சதவீதத்துக்கும் மேல் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்ற 58 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை, பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளைச் சோ்ந்த 587 பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு தலா ரூ.5,000 பரிசுத் தொகை, 100 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்ற 29 பள்ளிகளுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா்கள் இ.பெரியசாமி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் வழங்கினா்.