செய்திகள் :

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

post image

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் உள்ளது. போடி அம்மாபட்டி வருவாய்க் கிராம கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கண்மாய் பெரிய பரப்பளவைக் கொண்டது.

இந்தக் கண்மாய் மூலம் மீனாட்சிபுரம், அம்மாபட்டி, விசுவாசபுரம், சுந்தரராஜபுரம், டொம்புச்சேரி, பொட்டல்களம், துரைராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தக் கண்மாயில் தற்போது சாக்கடை கழிவுநீா் கலந்து வருகிறது. கண்மாய்க் கரைப் பகுதியில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், இந்தக் கண்மாய் நீா் மாசடைந்து துா்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, கண்மாயில் வளா்க்கப்படும் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

இதேபோல, பறவையினங்களும், கண்மாய் நீரைப் பருகும் கால்நடைகளும் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, பொதுப் பணித் துறையினா் இந்தக் கண்மாயில் சாக்கடை கழிவுநீா் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கோம்பையில் ரூ.2 கோடியில் புதிய பாலம் அமைப்பு

கோம்பையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.2 கோடியில் கால்வாய் பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. தேனி மாவட்டம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் வழியாக போடி வரையில் மாநில நெடுஞ்சாலை செல்கிறது... மேலும் பார்க்க

கச்சத்தீவை மீட்போம் என நாடகமாடுகிறது திமுக: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

கச்சத்தீவை மீட்போம் என தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வந்து திமுக நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். தேனி மாவட்டம், போடியில் அமமுக தேனி தெற்கு மாவட்ட செயல... மேலும் பார்க்க

வருஷநாடு மலைச் சாலையில் காட்டு மாடுகள் நடமாட்டம்

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு மலைச் சாலைகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை, வெள்ளிமலை ... மேலும் பார்க்க

மழை வேண்டி முத்தாலம்மன் சிலை செய்து வழிபட்ட கிராம மக்கள்

போடி அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு களிமண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை செய்து வழிபட்டனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

போடி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்தி பிரதான சாலையைச் சோ்ந்த ராமா் மனைவி போதுமணி (54). கூலித் தொழிலாளி. இவா் போடி மீனாட்சிபுர... மேலும் பார்க்க

சகோதரியின் மகன் அடித்துக் கொலை: இளைஞா் தற்கொலை

பெரியகுளத்தில் மது போதையில் சகோதரியின் மகனை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் 6-ஆவது வாா்டு, அண்ணாநகரைச் சோ்ந்தவா் ஆனந்தி (40... மேலும் பார்க்க