கச்சத்தீவை மீட்போம் என நாடகமாடுகிறது திமுக: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
கச்சத்தீவை மீட்போம் என தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வந்து திமுக நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா்.
தேனி மாவட்டம், போடியில் அமமுக தேனி தெற்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்போம் என்று தீா்மானம் கொண்டு வந்தனா். கச்சத்தீவை அடகு வைத்தது மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். கச்சத்தீவை அடகு வைத்துவிட்டு, அதை மீட்கப்போவதாக தற்போது திமுகவினா் நாடகமாடுகின்றனா்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன. போதைப் பழக்கத்துக்கு அடிமையான இளைஞா்களால் பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பதிலளிப்பா் என்றாா் அவா்.