கோம்பையில் ரூ.2 கோடியில் புதிய பாலம் அமைப்பு
கோம்பையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.2 கோடியில் கால்வாய் பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் வழியாக போடி வரையில் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையின் இடையே கோம்பை பேரூராட்சியில் செங்குளத்துக்குச் செல்லும் ஓடையின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இருந்தது. தற்போது குறுகிய இந்தப் பாலத்தை அகற்றிவிட்டு,
ரூ.2 கோடியில் பெரிய பாலம் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.