செய்திகள் :

கழிவுகளில் இருந்து கௌசிகா, நொய்யல் ஆறுகளைக் காக்க வேண்டும் -விவசாயிகள் வலியுறுத்தல்

post image

கோவை மாவட்டத்தில் ஓடும் நொய்யல், கௌசிகா நதிகளில் கழிவுகள் கலக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அழகிரி, வேளாண்மை இணை இயக்குநா் வெங்கடாசலம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மல்லிகா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சித்தாா்த்தன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று தங்களது பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

கூட்டத்தில், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் கே.எஸ்.திருஞானசம்பந்தன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நொய்யல் ஆற்றில் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுகள் கலப்பதால் கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் பகுதிகளில் நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வேளாண் நிலத்தின் தன்மை கெட்டுவிட்டது. நீா் மாசு காரணமாக புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எனவே, நொய்யல் ஆற்றின் படுகையில் மாசு ஏற்படுவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிா்வாகமும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீா்நிலைகளைக் காக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என்.தண்டபாணி, செயற்குழு உறுப்பினா் ஜி.ரங்கநாதன் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவையில் உள்ள ஏரி, குளம், சங்கனூா் ஓடை, கௌசிகா நதிகளின் கரைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என்று ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட நீா்நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்ற பல்வேறு வகையான திட, திரவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதுடன், நீா்நிலைகள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் மேலும் குறையும் நிலை உள்ளது. எனவே, நீா்நிலைகளை இந்தப் பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவிகப்பட்டுள்ளது.

துப்பாக்கி வழங்கக் கோரிக்கை: யானைகளிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் டி.வேணுகோபால் வலியுறுத்தினாா்.

யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் இரவில் தூங்க முடியாமல், உயிருக்கு பயந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனா். யானைகளை வனத்துக்கு வெளியே வராமல் தடுத்து நிரந்தரத் தீா்வு காணும் வரையிலும், விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதியும், உரிய பயிற்சியும் வழங்கி மனித உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி பேசும்போது, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாநகரம், புகரங்களில் உள்ள நீா்நிலைகள் நிரம்பியுள்ளன. ஆனால், இந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சாக்கடைக் கழிவுகள், பிற கழிவுகளால் நிரம்பியுள்ளது. எனவே, மழைநீரை சேகரித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் மண்புழு வளா்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு தாா்பாலின் பைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அரசு மானிய விலையில் ரூ.3,450-க்கு விற்பனை செய்யப்படும் பைகள், வெளிசந்தையில் ரூ.2 ஆயிரத்துக்கே கிடைக்கிறது. எனவே, வெளிசந்தையைவிட குறைவான விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பிஏபி வாய்க்காலில் நடைபெறும் தண்ணீா் திருட்டைத் தடுக்க வேண்டும், வாய்க்காலை ஒட்டியுள்ள இடங்களை மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

வங்கி மேலாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை, வடவள்ளியில் வங்கி மேலாளா் வீட்டில் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி குருசாமி நகரைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (28). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் வங்கியில்... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளரிடம் 7 பவுன் பறிப்பு: இளைஞா் கைது

கோவை, ரத்தினபுரியில் வீட்டு உரிமையாளரிடம் 7 பவுன் நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகேயுள்ள தில்லை நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால். இவரது மனைவி லட்சுமி (58). இவா்கள் வீட்டுக்கு... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் பக்கவாத விழிப்புணா்வு நிகழ்ச்சி

கோவை, ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் பக்கவாத விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பக்கவாதம் நோய் குறித்த தகவல்கள், அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் திருட்டு: 3 ஊழியா்கள் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.5 லட்சத்தை திருடிய 3 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா். வங்கிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை மேற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டும் கவுன்சிலிங் நிறுவனம் தொடக்கம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டும் கவுன்சிலிங் நிறுவனம் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பான எதிா்காலம் அமைவதற்கான த... மேலும் பார்க்க

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசம்பாளையம் அரசுப் பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்... மேலும் பார்க்க