செய்திகள் :

கழுகார்: `சாம்பிராணி போட்ட காக்கி மாஜி டு பாலியல் வழக்கு தொழிலதிபரிடம் கார் வாங்கிய மாவட்டப் புள்ளி!

post image

கட்சிக்காக உழைத்த சீனியர்கள் பலரிடமும், ‘டெல்லில பேசிட்டேன். உங்களுக்கு நான் பதவி வாங்கித் தர்றேன்...’ எனச் சாம்பிராணி போட்டே மூன்றாண்டுகளைக் கடத்திவிட்டாராம் அந்த மலர் மாஜி. அவரால் பாதிக்கப்பட்டவர்களில், பா.ஜ.க-வின் நிதி விவகாரங்களை எல்லாம் பார்த்துக்கொண்ட ‘கிங்’ பிரமுகரும் ஒருவர். அவரிடமும் ‘உங்களுடைய கட்சிப் பொறுப்புக்காக டெல்லியிடம் பேசிவிட்டேன்’ எனக் காக்கி மாஜி ஆட்டையைப் போட்டிருக்கிறர்.

தான் ஏமாற்றப்பட்டிருப்பது புரிந்து, கடும் மனவருத்தத்தில் இருக்கும் அவரிடம், ஆளுங்கட்சியின் நீலாங்கரை வகையறாக்கள் நெருங்கிப் பேசுகிறார்களாம். ‘பூகம்பங்களைக் கிளம்பும் விவகாரங்களை எல்லாம் பொதுவெளியில் போட்டுடைக்கச் சொல்லி’ நிர்பந்தப்படுத்துபவர்கள், ‘போலீஸ் பாதுகாப்பு தரவும்’ உத்தரவாதம் அளித்திருக்கிறார்களாம். விரைவிலேயே, கமலாலயத்தைக் கிடுகிடுக்க வைக்கும் விவகாரங்கள் ‘கிங்’ பிரமுகர் வழியாக வெடிக்கலாம்!

கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், கடும் அப்செட்டில் இருக்கிறாராம். வழக்கமாக, உயரதிகாரிகள்தான் கீழ்மட்ட அதிகாரிகளைப் பணி நிமித்தமாகவோ, தனிப்பட்ட காரணத்துக்காகவோ டார்ச்சர் செய்வார்கள். ஆனால் இங்கு நேருக்கு மாறாக, அந்தப் பெண் அதிகாரிக்குக் கீழே பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து, அவரை டார்ச்சர் செய்கிறார்களாம்.

இந்தப் பெண் உயரதிகாரியின் வேலைகளில் தலையீடுவதோடு, அவரின் அதிகார எல்லையிலும் மூக்கை நுழைத்துப் பஞ்சாயத்து செய்கிறார்களாம் அந்த இருவர். இது குறித்து தன்னுடைய மேலதிகாரியிடம் பலமுறை தகவலாகப் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் இல்லையாம். அதனால், கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான பெண் அதிகாரி, அடுத்து என்ன செய்யலாம், எனத் தனது நண்பர்களிடம் ஆலோசனை பெற்றுவருகிறாராம்!

கூட்டணிக் கட்சிகளைக்கூட எளிதாகச் சமாளிக்கும் சூரியக் கட்சியால், கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி மோதல்களைச் சமாளிக்க முடியவில்லை. அருவி மாவட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவர், தான் பதவியில் இருந்தபோது, 15 சென்ட் நிலத்தில், 100 அடிக்குக் கட்சியின் கொடிக்கம்பம் அமைக்க கான்கிரீட் தளம் அமைத்திருக்கிறார். அந்தத் தளத்தில் அந்த மாஜி மா.செ-வின் பெயர் இருந்ததால், தற்போதைய மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் சிலர், பொக்லைன் மூலம் அதை உடைத்திருக்கிறார்கள்.

அதனால், இரு தரப்புக்கும் இடையே கைகளப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறதாம். இந்த விவகாரத்தில் தலைமை விரைவிலேயே தலையிடவில்லை என்றால், பெரும் அசம்பாவீதம் நடக்கும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

தென்கோடி மாவட்டத்தின் தலைநகர் சட்டமன்றத் தொகுதியில், கடந்தமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த ஆளும் கட்சியின் மாஜி, இம்முறையும் சீட்டுக்கு முயற்சி செய்கிறாராம். ஆனால், ஆளும் கட்சியின் மாநில மகளிரணியின் உச்சப் பொறுப்பில் இருக்கும் பெண் நிர்வாகி, “அந்தத் தொகுதிதான் தனக்கு வேண்டும்” என அடம்பிடிக்கிறாராம். “தொகுதியை இப்போதே ஒதுக்கித் தந்தால் தேர்தல் பணியைத் தொடங்க வாய்ப்பாக இருக்கும்” என இருவரும் முதன்மையானவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை தலைமையிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம். எனவே, ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று எதிரெதிரே தேர்தல் வேலைகளைத் தற்போதே தொடங்கியிருக்கிறார்களாம். இதனால், யாரின் பின்னால் செல்வது என்று விழிபிதுங்கி நிற்கிறார்களாம் கட்சியினர்!

நெல் மாவட்டத்தில், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் சிக்கியுள்ள தொழிலதிபரின் பழக்கவழக்கம், ஆளும் கட்சி வரை நீள்கிறதாம். அதாவது, அந்தத் தொழிலதிபர்... உள்ளூர் ஆளுந்தரப்புடன் மிக நெருக்கமாகவும் செல்வாக்கவும் இருக்கிறாராம். சமீபத்தில், பொறுப்பு வாங்கிய முருகக் கடவுள் பெயர்கொண்ட மாவட்டப் புள்ளிக்கு, புதிய கார் ஒன்றைப் பரிசளித்து, தனது அன்பைக் காட்டியிருக்கிறார் தொழிலதிபர். அதேபோல, உள்ளூர் ஆளுந்தரப்புக்கு... கேட்ட நிதியைக் கொடுத்திருப்பதால், இந்தப் பாலியல் வழக்கை ஒன்றுமில்லாமல் அமுக்க முயல்கிறார்களாம்!

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாது... மேலும் பார்க்க