செய்திகள் :

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

post image

கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேசிக் கொண்டிருந்த டி.கே.சிவக்குமார், ’நமஸ்தே சதா வத்சலே’ எனத் தொடங்கும் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளும் பாஜகவின் சித்தாந்தத்தின் அடித்தளமாக இருக்கும் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐ காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில், கர்நாடக துணை முதல்வரின் இந்த செயல், காங்கிரஸ் கட்சியினரை மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சியினர் உள்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்து டி.கே. சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது:

“நான் பாஜகவினரை விமர்சிப்பதற்காகவே பாடினேன். ஆனால், என் நண்பர்கள் சிலர், அதனை அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. யாராவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

காந்தி குடும்பத்தை யாரும் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளமாட்டேன். நான் காங்கிரஸ்காரனாக பிறந்தேன். ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். கட்சிக்கு அப்பாற்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகளில் என்னை பின்தொடர்பவர்களும் நண்பர்களும் உள்ளனர். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத், “துணை முதல்வராக ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், மாநில காங்கிரஸ் தலைவராக அவ்வாறு செய்தது பொருத்தமற்றது. இதற்காக கண்டிப்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

Congress party state president and Deputy Chief Minister D.K. Shivakumar has apologized for singing an RSS song in the Karnataka Assembly.

இதையும் படிக்க : கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் பிரதமர் மோடி முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபின், எட்டாவது முறையாக ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் செல்கிறார்.... மேலும் பார்க்க

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

தலைநகர் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கவேண்டும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.சர்தார் படேல் வித்யாலயாவில் மாணவர்களுக்கான மின்சாரப் பேருந்துகள... மேலும் பார்க்க

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

ரகசிய தகவல்களைப் பெறுவதற்காக, சிஆர்பிஎஃப் உதவி துணை-ஆய்வாளர் மோதி ராம் ஜத் உடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளியிடம் இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையுடன் தொடர்புடைய மேலும் 15 பேரின் தொலைபேசி எ... மேலும் பார்க்க

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பிகாரில் பத்தாவது நாளாக நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்ப... மேலும் பார்க்க

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

திருவிழாக்கள், பண்டிகை நாள்களையொட்டி பயணம் மேற்கொள்ள, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடுமையான சவாலானதாக மாறிவிட்டிருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணிகள், ... மேலும் பார்க்க

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில, 26 வயதே ஆன நிக்கி பாட்டி, வரதட்சிணைக்காக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தல் திடீர் திருப்பமாக கணவர் விபின் பாட்டி மீது ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்ப... மேலும் பார்க்க