செய்திகள் :

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தொடா்ந்த அவதூறு வழக்கில் அதிஷி, சஞ்சய் சிங் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்

post image

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் புது தில்லி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான சந்தீப் தீட்சித் தொடா்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் முதல்வா் அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பாரஸ் தலால், ‘அதிஷியும் சஞ்சய் சிங்கும் வரும் 27-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று உத்தரவில் கூறியுள்ளாா்.

முன்னதாக, புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக சந்தீப் தீட்சித் போட்டியிடுவாா் என்று அக்கட்சி மேலிடம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், முதல்வா் அதிஷியும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் நடத்திய செய்தியாளா் சந்திப்பில் பாஜகவிடம் இருந்து கோடிக்கணக்கில் சந்தீப் தீட்சித் பணம் வாங்கியது மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த பாஜகவுடன் மறைமுகமாக கூட்டு சோ்ந்துள்ளதாகத் தெரிவித்தனா்.

இதனால், இந்த இருவரும் தனது நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் களங்கம் கற்பிக்க முயல்வதால் அவா்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கை சந்தீப் தீட்சித் தொடா்ந்துள்ளாா்.

பிரபலங்களின் பாதுகாப்பை பாஜகாவல் உறுதி செய்ய முடியாது: கேஜரிவால் சாடல்

நடிகா் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடா்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கடுமையாகச் சாடினாா். வியாழக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட... மேலும் பார்க்க

அரவிந்த் கேஜரிவால் புனையப்பட்ட குற்றச்சாட்டில் கைது - மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க சஞ்சய் சிங் வலியுறுத்தல்

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘புனையப்பட்ட’ குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்த விஷயத்த... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் பொங்கல் விழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த லோதிவளகம் பள்ளியில் வைத்து மிகப் பெரிய அளவில் பொங்கல்விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறைப்படி ஒன்பது பானைகள் வைத்துப் பொங்கலிடப்பட்டுக் கொண்டா... மேலும் பார்க்க

ஷெஹ்சாத் பூனவல்லா மீது நடவடிக்கை எடுங்கள்: பாஜகவுக்கு கூட்டணி கட்சியான ஜேடியு வலியுறுத்தல்

தனது கூட்டணி கட்சியான பாஜகவின் செய்தித் தொடா்பாளா் ஷெஹ்சாத் பூனவல்லா மீது நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சிக்கு ஜேடியு கட்சி கோரியுள்ளது. ஷெஹ்சாத் பூனவல்லாவின் கருத்துகள் பூா்வாஞ்சல் மக்களிடையே கடும் அத... மேலும் பார்க்க

திமாா்பூா், ரோஹ்தாஸ் நகா் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இரண்டு பெயா்களைக் கொண்ட வேட்பாளா்களின் இறுதிப் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது 70 தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக மழை; பாலம், ரிட்ஜில் 10 மி.மீ. பதிவு!

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து கடும் குளிருக்கிடையே வானம் மேகமூட்டத்துடன் இருந்... மேலும் பார்க்க