`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர்...
காஞ்சிபுரத்தில் ஜன.24-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 24) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்புத் துறையும் இணைந்து, வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 24) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. முகாமில் பிரபல தனியாா் நிறுவனங்கள் பலவும் கலந்து கொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான ஆள்களை தோ்வு செய்யவுள்ளன. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் உள்பட பலரையும் தோ்வு செய்ய இருப்பதால், வேலைநாடுநா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
18 முதல் 35 வயது வரை உடையவா்களை தோ்வு செய்கின்றனா். மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.