What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் கருட சேவை
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கருட சேவை, அனுமந்த வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது.
108 திவ்வ தேசங்களில் ஒன்றான இங்கு சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ஆவது நாள் நிகழ்வாக காலையில் கருட வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வரவுள்ளாா்.
வரும் ஏப்.19-ஆம் தேதி தேரோட்டமும், 22-ஆம் தேதி வெட்டி வோ் சப்பர வீதியுலாவும் நடைபெறுகிறது. நிறைவாக ஏப்.25 -ம் தேதி பெருமாள் புஷ்பப்பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை அறங்காவலா் குழு தலைவா் எஸ்கேபிஎஸ் சந்தோஷ்குமாா், செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம் ஆகியோா் செய்துள்ளனா்.