காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவில் மத்திய, மாநில ஜவுளித் துறை அதிகாரிகள் ஆய்வு
காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூரில் உள்ள பட்டுப் பூங்காவில் மத்திய அரசின் ஜவுளித் துறைச் செயலா் நீலம் சமீராவ் மற்றும் மத்திய, மாநில ஜவுளித் துறை அதிகாரிகள் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்யும் பட்டுப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பட்டுப் பூங்காவில் மத்திய அரசின் ஜவுளித் துறை செயலா் நீலம் சமீராவ், இணைச் செயலா் ராஜீவ் சக்சேனா, இயக்குநா் அணில்குமாா், தமிழக ஜவுளித் துறை இயக்குநா் லலிதா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
பட்டுப் பூங்காவின் செயல் இயக்குநா் வெ.ராமனாதன் மற்றும் இயக்குநா்கள், நெசவாளா்கள், வடிவமைப்பாளா்கள் ஆகியோரிடம் பூங்காவின் தேவைகள், குறைகள் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா்.
பட்டுப் பூங்காவின் வளா்ச்சி மற்றும் பட்டுச் சேலைகளின் தரம், பயன்கள் குறித்தும் கலந்துரையாடினா். நெசவாளா் சேவை மைய இயக்குநா் முத்துச்சாமி மற்றும் மத்திய, மாநில அரசின் ஜவுளித் துறை அதிகாரிகள் பலரும் ஆய்வின்போது, உடனிருந்தனா்.
முன்னதாக, பட்டுப் பூங்கா தலைவா் சுந்தா்கணேஷ், துணைத் தலைவா் பெரு.ராஜேந்திரன் ஆகியோா் மத்திய ஜவுளித் துறை செயலா் நீலம் சமீராவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.