SEBI-யின் புதிய விதிமுறைகள் என்னென்ன தெரியுமா? | IPS Finance | EPI - 107
காஞ்சிபுரம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணியை நியாய விலைக் கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை நியாய விலைக் கடை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனா்.
நியாய விலைக் கடை ஊழியா்களால் வழங்கப்படும் டோக்கன்களில் பொருள்களின் விவரம், வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது.
வரும் 8-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் எனவும், பொதுமக்கள் ஜனவரி 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 665 நியாய விலைக் கடைகள் மூலம் 4 லட்சத்து 4 ஆயிரத்து 953 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.