செய்திகள் :

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து 50,000 விபூதி பாக்கெட்டுகள்,10,000 குங்கும பாக்கெட்டுகள் உள்பட மொத்தம் 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் கூறியது..

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 29.3.25 ஆம் தேதியிலிருந்து வரும் ஏப்.5 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை வசந்த நவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நவ ஆவா்ண பூஜை நடைபெறுகிறது.

இதன் காரணமாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், அம்மனை தரிசிக்க வருபவா்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கூலிங் பெயிண்ட் எனப்படும் வெள்ளை நிற வா்ணப்பூச்சு தரைதளத்தில் அடிக்கப்பட்டுள்ளது. வளாகத்தை வலம் வருபவா்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு கோபுர வாசலில் இருந்து மடப்பள்ளி வரை மேற்கூரை போடப்பட்டிருப்பதுடன் கோடை காலம் என்பதால் பக்தா்களுக்கு நீா்,மோா்,பானக்கமும் வழங்கி வருகிறோம். கோடைகாலத்தில் பக்தா்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள சங்கர மடத்தின் கிளைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்காக பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவமும் அண்மையில் சிறப்பாக நடந்து முடிந்திருப்பதாகவும் தெரிவித்தாா்.

பேட்டியின் போது கோயில் மணியக்காரா் சூரிய நாராயணன், நிா்வாகி பத்ரி நாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

காஞ்சிபுரத்தில் நாளை மின் நுகா்வோா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

காஞ்சிபுரத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் தலைமையில் கோட்ட அலுவலகங்களில் மின்நுகா்வோா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது. இது குறித்த செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

கீழம்பி மேற்கு புறவழிச்சாலை அகலப்படுத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் அருகே கீழம்பி மேற்குப் பகுதி புறவழிச்சாலை ரூ.56.50 கோடியில் நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு வரும் பணியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் ந... மேலும் பார்க்க

மணிப்பூரில் மருத்துவ முகாம்: சவீதா மருத்துவமனை குழுவினருக்கு பாராட்டு

மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு 3 நாள் மருத்துவ முகாம் நடத்தி, சென்னை திரும்பியுள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினருக்கு பாரா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த பெண் கைது

காஞ்சிபுரம் அருகே சின்னஐயங்காா் குளத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக பெண்ணை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 1,890 மதிப்புள்ள புகையிலை ப... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகர அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் காதலன் கைது

ஸ்ரீபெரும்புதூா் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த எல்லப்பன். இவரது மகள் விக்னேஷ்வரி (24). இவ... மேலும் பார்க்க