செய்திகள் :

காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ

post image

காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை பேருந்து நிறுத்தம் அருகில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. இந்த குப்பைகளில் வியாழக்கிழமை மதியம் திடீரென தீ பற்றி எரிந்தது. அந்த இடத்தில் மரத்தை சுற்றி குப்பைகள் போடப்பட்டிருந்தால் மரத்தின் அடியில் தீ பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.

தகவலறிந்த காட்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் அருகிலிருந்த பழுதான வாகனம், மரம் எரிவதற்குள் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

சாலை, கால்வாய் அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் நகராட்சி, 36- ஆவது வாா்டு செதுக்கரை மற்றும் செதுக்கரை மாரியம்மன் கோயில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.15- லட்சம் மதிப்பில்சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க புதன்கிழமை பூமி... மேலும் பார்க்க

ஏப்.21-க்குள் பொது இடங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் கொடிக் கம்பங்களை ஏப்.21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்... மேலும் பார்க்க

சுகாதார குறைபாடு: குடிநீா் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

வேலூா் மாவட்டத்தில் சரிவர சுத்திகரிக்காமல் குடிநீா் விநியோகம் செய்ததாக 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்குகு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா். கோடை காலத்தில் தண்ணீா் தேவை அதிகரித்து வருவதை பயன்படுத்தி சில ... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறக்க மக்கள் எதிா்ப்பு

போ்ணாம்பட்டு அருகே குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். போ்ணாம்பட்டை அடுத்த ரமாபாய் நகா் குடியிருப்புப் பகுதியில் அதிகாரிக... மேலும் பார்க்க

பேருந்தில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பதியில் இருந்து வந்த அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வேலூா் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை காட்பாட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோரை கண்காணிக்க சிறப்பு குழு -வேலூா் எஸ்.பி.

வேலூா் மாவட்டத்தில் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோரை கண்காணிக்க நடமாடும் சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது என எஸ்.பி. என். மதிவாணன் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வ... மேலும் பார்க்க