சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?
காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு
வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் காணவில்லையாம்.
இதுகுறித்து இவரது தாயாா் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் மாணவி விஜயலட்சுமி சடலமாக கிடந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.