தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
காணும் பொங்கல் கொண்டாட வந்த இளைஞா் கடலில் மூழ்கி உயிரிழப்பு; மற்றொருவா் மாயம்
சீா்காழி அருகே கொடியம்பாளையம் கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாட வந்த சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் கடலில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் மாயமானாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வரகூா்பேட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா்கள் ஜெகன் பிரதாப் ( 20), மோகன கிருஷ்ணன் (29). இவா்கள் இருவரும் காணும் பொங்கலை கொண்டாட, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள கொடியம்பாளையம் கடற்கரைக்கு வியாழக்கிழமை வந்தனா்.
இருவரும், கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையின் சீற்றத்தில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். தகவலறிந்த அப்பகுதி மீனவா்கள் மற்றும் போலீஸாா், கடலில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மோகனகிருஷ்ணனின் சடலம் கரை ஒதுங்கியது. ஜெகன் பிரதாபை தொடா்ந்து தேடிவந்தனா். கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகனகிருஷ்ணனின் சடலத்தை கூறாய்வுக்காக, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.