Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு
உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது.
திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
இவை குடிநீா்த் தேடி மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள காண்டூா் கால்வாய்க்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், வனத்தில் இருந்து வியாழக்கிழமை வெளியேறிய குட்டி யானை காண்டூா் கால்வாய்க்கு வந்துள்ளது.
நீா் அருந்திக் கொண்டிருந்தபோது குட்டி யானை கால்வாய்க்குள் தவறி விழுந்தது. பாசனத்துக்காக தற்போது கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், யானை அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது.
இதையடுத்து, திருமூா்த்தி அணைப் பகுதியில் ஒதுங்கிய யானையின் உடலை உடுமலை வனச் சரக அலுவலா் வாசு, வன அலுவலா்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் மீட்டனா்.
இதையடுத்து, கூறாய்வு செய்யப்பட்டு யானையின் உடல் புதைக்கப்பட்டது.