‘காதலிக்க நேரமில்லை’ எப்படி இருக்கும்? கிருத்திகா உதயநிதி பகிர்ந்துள்ள தகவல்
‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஜன. 7) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுமென்று இப்படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். பொங்கல் நாளன்று ஜன. 14-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், ‘காதலிக்க நேரமில்லை’ எப்படி இருக்கும்? என்பது குறித்து கிருத்திகா உதயநிதி சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என் மனசுக்கு நெருக்கமானதொரு கதை இது, காதல், நகைச்சுவை, சுவாரசியங்கள் நிறைந்ததும்கூட. இதனை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் படு உற்சாகமாக இருக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.