நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!
காதலியிடமிருந்து வந்த கடிதம்; 500 புஷ்அப்ஸ் செய்து பெற்ற ராணுவ அதிகாரி - `ஓர்' அடடே சம்பவம்!
தற்போது சமூக ஊடகங்களில் காதலை பகிர வீடியோக்கள், எமோஜிகள் எல்லாம் இருந்தாலும் கையெழுத்துக் கடிதங்கள் கொண்டிருந்த பாசம் மனதை வருடும். அதற்குச் சான்றாக, முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி கேப்டன் தர்மவீர் சிங் பகிர்ந்த பழைய காதல் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
2001ஆம் ஆண்டு சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) அவர் சேர்ந்தபோது வந்த அவரது காதலி அனுப்பிய கடிதம் குறித்து ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இன்று அந்த ‘காதலி’ வாழ்க்கைத் துணையாகவும், இரட்டைக் குழந்தைகளின் தாயாகவும் உள்ளார்.

காதலி அனுப்பிய அந்தக் கடிதம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. கேப்டன் சிங் இது குறித்து கூறியதாவது
“எங்கள் சீனியர்கள், குடும்பத்தினரிடமிருந்து வரும் கடிதங்களை உடனே தர மாட்டார்கள்.
முதலில் 100 அல்லது 50 புஷ்அப்ஸ் செய்தால் தான் கையில் கிடைக்கும். ஆனால் இந்தக் கடிதம் கொஞ்சம் தடிமனாக இருந்ததால், அதன் எடையைப் பார்த்து சீனியர்கள் என்னை 500 புஷ்அப்ஸ் செய்ய வைத்தார்கள்.
அந்தக் கடிதம் தான் அகாடமியில் பெற்ற முதல் கடிதம். எழுதும் போது எடுத்த உழைப்பே, உணர்வுகளை இன்னும் நீண்ட காலம் உயிரோடு வைத்திருக்கிறது” என்று அவர் நினைவுகூர்ந்திருந்தார். இந்த கடிதம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.