தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
காதலியைக் கரம் பிடித்த சுந்தரி தொடர் நடிகர்!
நடிகர் ஜிஷ்ணு மேனன் தனது நீண்ட நாள் காதலி அபியாத்ராவை கரம் பிடித்தார்.
சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். எதிர்மறையான பாத்திரத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர், தற்போது ரோஜா - 2 தொடரில் நடித்து வருகிறார். நடிகை ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடிக்கும் புதிய தொடரில் ஜிஷ்ணு மேனன் நாயகனாக நடிக்கிறார். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதனிடையே, நடிகர் ஜிஷ்ணு மேனன், ஒப்பனைக் கலைஞர் அபியாத்ராவை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில், நடிகர் ஜிஷ்ணு மேனன் - அபியாத்ராவுக்கு கோயிலில் உற்றார் உறவினர் முன்னிலையில் எளிமையான முறையில் இன்று(மே 14) திருமணம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக சுந்தரி தொடர் நடிகர் அரவிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளை பகிர்ந்து திருமண விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் ஜிஷ்ணு மேனன் - அபியாத்ராவுக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட பாரதி கண்ணம்மா தொடர் பிரபலங்கள்!