செய்திகள் :

`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சிரிப்பலை!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் அருகே முள்ளிச்சேவல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் தங்களுக்கு இன்னும் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வரவில்லை என்று அமைச்சரிடம் கூறினர். அவர்களிடம் உரிய மனு அளிக்குமாறும் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் “இப்படி காதில், கழுத்தில் நகைகள் அணிந்து வந்தால் மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுப்பாங்க" என அவர்களை பார்த்து கிண்டல் செய்தார். அங்கே இருந்த பொதுமக்கள் அனைவரும் நகைச்சுவையுடன் சிரித்தனர். மேலும் நகைகள் கணக்கில் வந்தால் மகளிர் உரிமைத் தொகையானது தரப்பட மாட்டாது என அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களிடம் தெரிவித்தார். அங்கு கூடியிருந்தவர்களும் இதனை நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டனர்.

'சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா; பொன்முடியும் செந்தில் பாலாஜியும்..!'- நெல்லையில் அமித் ஷா

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர்... மேலும் பார்க்க

'பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது நமது கடமை'- பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேசியது என்ன?

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். மேலும் பாஜக நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அபகரிப்பு’ புகாரில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார்; களமிறங்கிய கவர்னர்; பின்னணி என்ன?

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும், ரௌடிகள் மற்றும் போலிப் பத்திரங்கள் மூலம் அபகரிப்பது தொடர் கதையாகி வருகிறது. அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசியல... மேலும் பார்க்க

கேரளா: நடிகை உள்ளிட்டோர் பாலியல் புகார்; பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ; பின்னணி என்ன?

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலக்காடு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் போட்டியிட்டு எம்.பி-ஆனார். அதைத்தொடர்ந்... மேலும் பார்க்க