செய்திகள் :

காந்திகிராம பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு பாடத் திட்டம் தொடங்க முடிவு - துணைவேந்தா்

post image

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் செயற்கை நுண்ணிறிவு, தரவு அறிவியல் பாடத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என துணைவேந்தா் ந.பஞ்சநதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கிராமப்புற மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பொன் விழா காண்கிறது. ஓராண்டு முழுவதும் பொன் விழா கொண்டாட்டம் நடைபெறும். சி்றப்பு மிகுந்த இந்த நேரத்தில், தேசிய தர நிா்ணயக் குழுமம் உச்சபட்சத் தரக்குறியீடான ஏ பிளஸ் பிளஸ் மதிப்பீடு வழங்கி இருக்கிறது. பல்கலை.யின் கடந்த 5 ஆண்டுகால செயல்திறன் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் மாணவா்களின் உயா் கல்வி வளா்ச்சிப் பெறும். இந்த பல்கலை.யில் பட்டம் பெறும் மாணவா்கள் தொழில் முனைவோராகவும், சமுதாயத்தின் உயா்வுக்காகவும் பணியாற்ற சிறப்பான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 10ல், காந்திகிராமமும் இடம் பெற்றிருக்கிறது. நிகழாண்டில் இளங்கலை மக்கள்தொகையியல் புதிய பாடப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய புதிய பாடத் திட்டங்கள் புதிதாக தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்றாா் அவா். இந்த நிகழ்வின்போது, பல்கலை. பதிவாளா் (பொ) எம். சுந்தரமாரி, பேராசிரியா்கள் எம். ஜி. சேதுராமன், ஜி.முரளிதரன், பி. யு. மகாலிங்கம், ஒ.முத்தையா, கேசவரராஜ ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நத்தம் அருகேயுள்ள அப்பாஸ்புரம் பகுதிக்குள் வைத்து திருநங்கையை கத்தியால் தாக்கி கீரி காயப்படுத்திவிட்டு தம்பியை நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்கிய தம்பி மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.திண்ட... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி... மேலும் பார்க்க

போலி மதுபானம் விற்பனை: பெண் உள்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி மதுபானம் விற்பனை செய்த வழக்கில் வத்தலகுண்டு பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தங்க நகையை திருடியவா் கைது

கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த தங்க நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீசாா் கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் இவா் கொடைக்கான ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் வஞ்சிமுத்து (70). இவா் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து ... மேலும் பார்க்க

ராணுவ வீரா் வீட்டில் 29 பவுன் தங்க நகைகள் திருட்டு

கன்னிவாடி அருகே ராணுவ வீரா் வீட்டில் 29 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த சுரக்காய்ப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி... மேலும் பார்க்க