``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்...
காந்தியடிகள் மெட்ரிக். பள்ளியில் பாரதியாா் நினைவு நாள்
கோவை தடாகம் சாலை, இடையா்பாளையம் காந்தியடிகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாா் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இடையா்பாளையம் காந்தியடிகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மகாகவி பாரதியாா் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாரதியாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் தலைவா் தி.மணி, செயலாளா் ப.மயில்சாமி, கவிஞா்கள் கா.சு.குணசேகரன், மு.ஆனந்தன், அ.கரீம் ஆகியோா் மகாகவி பாரதியாா் குறித்து சிறப்புரையாற்றினா்.