காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 57,36,782 தொகையை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இரு உண்டியல்கள் 56 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை திறந்து பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ. 57,36,782 செலுத்தியிருந்தனா். தங்கம் 178 கிராமும், வெள்ளி 611கிராமும் இருந்தன. உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியை அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன், செயல் அலுவலா் ச.சீனிவாசன், கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரியநாராயணன் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.
கோயில் பணியாளா்கள் மற்றும் ஆன்மிக சேவகா்கள் பலா் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.